என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கோவிலில் கொள்ளை
நீங்கள் தேடியது "கோவிலில் கொள்ளை"
புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கடை:
புதுக்கடையை அடுத்த செட்டியார் வளாகம் பணங்கால முக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில், பத்தி ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது.
சம்பவத்தன்று கோவிலில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. பின்னர் மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு நிர்வாகி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் சம்பவம் குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் மதிப்புள்ள 4 தங்க தாலிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கியது.
போலீசார் இந்த கைரேகையை கொண்டு பழைய குற்றவாளின் கைரேகைகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.
சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.

சுசீந்திரம் அருகே வீடு மற்றும் கோவிலில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
என்.ஜி.காலனி:
சுசீந்திரம், சொத்தவிளை கண்டாங்கி தோப்பு பகுதியில் சுடலைமாட சுவாமி கோவில் உள்ளது. கோவிலுக்கு நேற்று தெங்கம் புதூர் புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் (வயது 30). மற்றும் அவரது உறவினர்கள் சென்றனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்துக் கொண்டிருந்தார். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அந்த வாலிபரை பின் தொடர்ந்து விரட்டிச் சென்று சிறிது தூரத்தில் மடக்கிப் பிடித்தனர்.
இது குறித்து சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் சலீம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பறக்கை வண்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆனந்த் (23) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
புத்தளம் அரியபெருமாள்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தங்கம் (57). இவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரைக்கு சென்று இருந்தனர். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கூரைகள் பிரிக்கப்பட்டு வீட்டில் இருந்த டி.வி. மற்றும் வீட்டு உபயோக பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் கிரேசியஸ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×

X